இது தெரிஞ்சா எங்க அப்ளை பண்ணாலும் லோன் கிடைக்கும் நீங்கள் புதிதாக PAN கார்டு வாங்கியுள்ளீர்கள்கள் எனில் உங்களது கிரெடிட் ஸ்கோர் பூஜ்யம...
இது தெரிஞ்சா எங்க அப்ளை பண்ணாலும் லோன் கிடைக்கும்
நீங்கள் புதிதாக PAN கார்டு வாங்கியுள்ளீர்கள்கள் எனில் உங்களது கிரெடிட் ஸ்கோர் பூஜ்யமாகவோ ! இல்லை CIBIl போன்ற நிறுவனங்களில் உங்களது PAN பதிவு செய்யப்படாமலே இருக்கும். இந்த நிலையில் நீங்கள் எங்கு அப்ளை செய்தாலும் Un-secured Peraonal லோன் என்பது கிடைக்காது.எப்படி புதிய கிரெடிட் ஹிஸ்டரி மற்றும் மதிப்பெண்ணை உருவாக்குவது:
இது போன்ற சூழ்நிலையில் 3 முறைகளை பயன் படுத்தி நீங்கள் உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணை உயர்த்தலாம். அதிலும் எந்த தவறுகளும் உங்களுடைய கிரெடிட் ஹிஸ்டரியில் இல்லாமல் உங்களது மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும், அப்போது தான் அடுத்து எந்த விதமான லோன் மற்றும் கிரெடிட் card க்கு அப்ளை செய்யும் போது அப்ரூவல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.Option 1:
முதலாவதாக நீங்கள் உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை உங்களுக்கு அருகில் இல்ல பாங்க் களிலோ இல்லை பைனான்ஸ் களிளோ அடகு வைக்கலாம் , அவ்வாறு வைக்கும்போது அவர்கள் உங்களின் பான் நகலை கேட்டு update செய்ய வேண்டும் இல்லையேல் எந்த பயனும் இருக்காது , அவ்வாறு அடகு வைத்த நகையை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வட்டி தொகையை செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும், அதிலும் பாங்கில் குறிப்பிடும் தொகையில் குறைவான தொகையை மட்டுமே பெற்று கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மிக எளிதாக உங்களது கிரெடிட் மதிப்பெண் உயரும்.Option 2 :
ஒரு வேளை உங்களிடம் தங்க நகைகள் எதுவும் இல்லை எனில் சிறிய தொகையை செலுத்து Secured FD கிரெடிட் கார்டை வாங்கி , உங்களுடைய கிரெடிட் கார்டு அப்ரூவல் லிமிட்டில் இருந்து 30% க்கும் குறைவான தொகையை பயன்படுத்தி விட்டு, சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவும் வேண்டும் . இந்த FD credit card சமீபத்தில் அதிகப்படியான பாங்க் மற்றும் நிதி நிறுவனங்களில் கிடைக்கிறது அதில் பாதுகாப்பான கார்டாக வாங்கி பயன் படுத்துவது சிறந்தது , இந்த வழியிலும் நீங்கள் எதிர் பாரத அளவில் சிபில் மதிப்பெண் உயரும்.Option 3 :
மேற்கண்ட இரண்டு முறைகளும் எதாவது ஒரு முதலீட்டை நோக்கி உள்ளது, ஆனால் இந்த இந்த முறையில் எந்த முதலீடும் இல்லாமல் அதாவது பணத்தையோ பொருளையோ கொடுக்காமல் சிபில் மதிப்பெண்ணை உயர்த்தலாம்.நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று EMI - ல் மொபைல் போன் களையோ இல்லை வேறு எதேனும் பொருட்களையோ Consumer Durable Option - ல் EMI இல் பொருட்களை வாங்கி சரியான முறையில் அனைத்து EMI - களையும் கட்டினால் நிச்சயம் உங்களது சிபில் உயரும் , அதே நேரத்தில் இந்த consumer durable லோன் அதிகப்படியான நபர்களுக்கு அப்ரூவல் கிடைக்கும் என்பதால் ,இது மிக சிறந்த வழியாக கருதப்படுகிறது.
Additional Option:
இந்த முறைகளில் உங்களது கிரெடிட் ஹிஸ்டரி - யை பாஸிட்டிவ் வாக கொண்டு சென்றால் ஒரு சில நம்பகமான ஆன்லைன் லோன் அப்ளிகேசங்களில் ( Mpokket, truebalance,Branch,yuva etc...) அப்ரூவல் என்பது கிடைக்கும் , அந்த அப்ரூவல் தொகையை பெற்று கொண்டு சரியான முறையில் திருப்பி செலுத்த செலுத்த உங்களுடைய கிரெடிட் ஹிஸ்டரி பாஸிட்டிவ் வாக வளர்ந்து வருவதால் மற்ற பெரிய லோன்ங்களும் அப்ரூவல் கிடைக்கும் வாய்ப்புகளை பெறலாம்.செய்யக்கூடாதவை:
- நிறைய இடங்களில் கடன்களுக்கு அப்ளை செய்வது.
- கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாமல் தவற விடுவது.
- அதிகப்படியான தொகையை கடனாக பெறுவது.
- நிறைய கடன் வைத்திருப்பது.
- கடனுக்கு அப்ளை செய்யும் போது தவறான தகவலை மாற்றி மாற்றி கொடுப்பது.
- வீட்டில் மற்றவர்கள் கடன் வாங்கும் போது நீங்கள் உங்களுடைய பான் மற்றும் ஆதார் தகவலை கொடுப்பது( அவர் கட்டவில்லை எனில் உங்களையும் பாதிக்கும்).
- இது அனைத்தையும் விட வேலைக்கு செல்லாமல் இருப்பது ( பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியில் இருந்தால் எளிதாக அனைத்து இடங்களிலும் அப்ரூவல் கிடைக்கும் ).
COMMENTS