Price Announced 12.5 Lakh Starting, additionally two Colours are added.checkout complete specification and features, interor and exteriar images
டாடா சியாரா முதல் மற்றும் இரண்டாவது விளம்பரத்தில் கிடைத்த தகவல்கள்
டாடா சியாரா கார் இந்த மாதம் நவம்பர் 25 இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அதாவது 1991 இல் இருந்து 2003 வரை இந்தியாவில் சக்கை போடு போட்ட இந்த கார் தற்பொழுது மறு வடிவம் பெற்று, அதே முக்கியதுவதுடன் காலத்திற்கேற்ற மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது நவீன வசதிகளுடன் கூடிய கார் ஆக 12 லட்சத்தில் ஆன் ரோடு இந்த கார் வெளிவர இருக்கிறது.இந்த விலையில் ஏற்கனவே டாடா Curv மற்றும் டாடா harrier போன்ற டாடா நிறுவன கார்களே இருந்தாலும் இதுக்கான மவுசு தனி என்று தான் கூறமுடியும் , இதனை தவிர்த்து மற்ற நிறுவன கார்களின் வரிசையில் மாருதி விக்டோரியஸ்,கியா செல்டாஸ், ஹோண்டா Elevate, கிராண்ட் விட்டாரா முக்கியமாக சமீபத்தில் விற்பனையில் சொல்லி அடித்த ஹூண்டாய் creta போன்ற கார்களும் உள்ளன என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
டாடா சியாரா வெளிப்புற தோற்றம்
முன்புறமாக நீளமான கருப்பு நிற கிரில் தோற்றத்திற்கு மேலாக அதிற்கு இணையான நீளத்தில் LED DRL லைட் பார் இணைக்கப்பட்டுள்ளது இருபுறமும் கீழாக LED FOG LAMP ம் வைக்கப்பட்டுள்ளது இதன் முன்புற தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்பதில் துளியும் யோசிக்க தேவையில்லை. அதே போல் பக்கவாட்டில் பிரஸ் டோர் ஹன்ல்டில் மற்றும் அல்லாய் வீல் களும் கூடுதல் வசதிகளாக உள்ளன , பின் புற தோற்றம் பார்க்க ஏதோ MG ev இல் பார்த்த மாதிரி இருந்தாலும் சியாரா பிரியர்களுக்கு பிடிக்கலாம் என்றே தெரிகிறது.உட்புற தோற்றம்
தற்பொழுது வரையில் 3 திறைகளுடன் கூடிய dashboard யை கொண்டுள்ளது தெரிய வருகிறது இதுவும் பார்க்க மஹிந்திரா XEV 9 ல் பார்த்த தோற்றத்தில் உள்ளது குறிப்பிட தக்கது, மேற்புறமாக இரண்டு Panoramic sun roof உடனும் பின்புறமும் கண்ணாடி கதவுகளை கொண்டதாக உள்ளது உட்புற சீட்டுகள் மற்றும் பார்வைகள் ivory நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது ,இதில் இதர அனைத்தும் நாம் டாடா Curv இல் ஏற்கனவே பார்த்தது போன்ற என்னத்தை தருகிறது.இதர வசதிகள் மற்றும் அம்சங்கள்:
தொடு திரையுடன் கூடிய முன்புற டிஸ்ப்ளே, குளிர் காற்றுஊர்பட்ட இருக்கைகள், பின் புறம் 3 இருக்கைகள் head rest உடனும் உள்ளதாக தெரிகிறது இது SUV ரக கார் என்பதால் 5 சீட்டுகளுடன் மட்டுமே வரவும் வாய்ப்புள்ளது, மேலும் சிறப்பான சவுண்ட் சிஸ்டம், அடாஸ்,360 டிகிரி காமரா , அனைவருக்குமான பாதுகாப்பு ஏர் பேக்குகள் ,தேவையான அளவில் பின் பக்க பூட் ஸ்பேஸ் ம் உள்ளது.என்ஜின் அம்சங்கள்
இது 3 வசதியில் EV , பெட்ரோல் மற்றும் டீசல் வரவுள்ளது , இதில் 2L டீசல் என்ஜின்,1.5L டர்போ பெட்ரோல் என்ஜின் 170பிஜேபி & 280Nm உடனும் முதலில் அறிமுகமாக இருக்கலாம் , இந்த பெட்ரோல் என்ஜின் தான் இந்த செகமெண்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது அதாவது எர்கனவே வெளியான டாடா harrier மற்றும் fortuner போன்ற கார்கள் டீசலையே நம்பியிருக்க இந்த SUV இல் பெட்ரோல் என்ஜின் இருப்பது எதிர் பார்ப்பாளர்களுக்கு நிம்மதியை அளிக்கிறது.விலை
ஆரம்ப மாடலாக petrol manual car 12 லட்சத்தில் இருந்து, டாப் மாடல் ஆன டீசல் automatic DCA 18 லட்சம் வரை விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.நிறங்கள்
ஏற்கனவே மஞ்சள் நிறத்தில் கவரும் கண்ணை கவரும் வகையில் விளம்பர படுத்த பட்ட நிலையில் சியாரா பிரியர்களுக்கு சிவப்பு நிறமும் இடம்பெறலாம்.இந்த தகவல்கள் அனைத்துமே விளம்பரங்களில் கசிந்த தகவள்களாகவே உள்ளன, அதிகார பூர்வ தகவல்கள் நவம்பர் 25 அன்றே கிடைக்கும்.
COMMENTS